அமித்ஷா, நிர்மலா சீதாராமனை பார்த்து பேசினேன்: செங்கோட்டையன்
அதிமுகவை ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்து அமித்ஷா, நிர்மலா சீதாராமனிடம் பேசினேன் என முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியுள்ளார்.;
By : King 24x7 Desk
Update: 2025-09-09 10:30 GMT
Sengottaiyan
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், “அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடர்பாக அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனிடம் பேசினேன். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம் குறித்து பரஸ்பரம் கருத்து பறிமாற்றம் நடைபெற்றது. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். இயக்கம் வலுப்பெற வேண்டியதன் அவசியம் குறித்து நாங்கள் எடுத்து சொன்னோம். ஈரோட்டில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை வைத்தேன் என்றார்.