ஈபிஎஸ் டெல்லி சென்று வந்த பின் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்: நயினார் நாகேந்திரன்

ஈபிஎஸ் டெல்லி சென்று வந்த பின் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் என தமிழக பாஜக ட்ஜலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-09-15 12:39 GMT

Nainar Nagendran

மதுரையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்காக நெல்லையிலிருந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புறப்பட்டு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “நான்கு முனை போட்டியும் நடக்கலாம் 5 முனை போட்டியும் நடக்கலாம் தேர்தலில் ஜெயிக்க போது தேசிய ஜனநாயக கூட்டணி தான். கூட்டணிகுறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி உடனும் நான் பேசியிருக்கிறேன். அவர் டெல்லிக்கு சென்று தலைவர்களை சந்திக்க இருக்கிறார். அதன் பிறகு நல்ல விஷயங்கள் நிறைய நடக்கும். ஈபிஎஸ் கூட்டணி கட்சியில் இருக்கிறார். அதனால் சென்று அமித்ஷாவை பார்க்க இருக்கிறார்.அதிமுகவில் குழப்பமே இல்லையே. செங்கோட்டையன் ஏற்படுத்தியிருப்பது குழப்பம் என்று சொல்ல முடியாது. அடுத்தவர்கள் கட்சி கூட்டத்தை பற்றி நான் பேச விரும்பவில்லை. அது அவர்களின் நிர்வாகத்தை பொருத்தது. கூட்டம் சேர்த்தால் ஜெயிக்க முடியாது. ஓட்டு வாங்கினால் தான் ஜெயிக்க முடியும்” எனக் கூறினார்.

Similar News