அதிமுக ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்தது பாஜகதான், அந்த நன்றியோடு இருக்கிறோம்: ஈபிஎஸ்

ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம்தான் முக்கியம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;

Update: 2025-09-16 09:58 GMT

EPS

சென்னையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம்தான் முக்கியம். இம்மி அளவு கூட விட்டுக்கொடுக்க மாட்டேன். சில பேர் கைக்கூலியாக ஆட்டம் போடுகிறார்கள். அந்த கைக்கூலிகள் யார் என அடையாளம் கண்டுவிட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும். அம்மா மறைவிற்குப் பிறகு சில பேர் கட்சியை கவலைக்கிடமாக்கி ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள். அதைக் காப்பாற்றி கொடுத்தவர்கள் மத்தியில் இருப்பவர்கள் தான். நன்றி மறப்பது நன்றன்று. அதனால்தான் நாங்கள் மத்திய அரசுக்கு நன்றியோடு இருக்கிறோம். அதிமுகவை எவராலும் ஒன்றும் பண்ண முடியாது. சொல்றேன். எழுதிக்கோங்க. எங்களுக்கு ஆட்சி, அதிகாரம் இருப்பதைவிட தன்மானம்தான் முக்கியம். அதில் இம்மியளவும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். கட்சிக்காக உழைக்கிறவங்கள தான் அனுசரிச்சு போக முடியும். சில பேரு அதிமுகவ அடமானம் வைக்க பாக்குறாங்க. அதிலிருந்து காப்பாத்த அனைவரும் துணிந்சு நிக்கணும். அதிமுகவுக்கு துரோகம் செய்றவங்க நடு ரோட்டில நிப்பாங்க. துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் இறைவன் மன்னிக்க மாட்டான். அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 பேரை கடத்திச் சென்றவர்களை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா..? என்னை யாராலும் மிரட்ட முடியாது. அதிமுக ஆட்சியில் இருந்த போது பாஜக எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. அதிமுக-வை உடைக்க முயன்றவரை மீண்டும் மன்னித்து துணை முதலமைச்சர் பதவி வழங்கினோம். தருமபுரியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியதன் அடிப்படையில் சுற்றுப்பயணம் மாற்றம் செய்யப்பட்டது. உடனே மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். பேச்சுவார்த்தை நடத்துகிறார். உட்கட்சி பிரச்சனை என செய்தி வெளியிட்டுள்ளனர்.” என்றார்.

Similar News