ஊர் ஊராய் சுற்றும் விஜய்க்கு பாஜக கட்சி குறித்து என்ன ஞானம் என தெரியவில்லை: நயினார் நாகேந்திரன்

புதிய கட்சி ஆரம்பித்து ஊர் ஊராய் சுற்றும் விஜய்க்கு பாஜக கட்சி குறித்து என்ன ஞானம் என தெரியவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.;

Update: 2025-09-22 08:08 GMT

Nainar

பொள்ளாச்சியை அடுத்த சிங்காநல்லூர் பகுதியில் ஆனைமலை மேற்கு ஒன்றியம் சார்பாக நடந்த இணைப்பு விழாவில் இரவு 11 மணி அளவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இதில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பாஜக தேர்தல் பார்வையாளர் அரவிந்த் மேனன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “பாஜகவும் திமுகவும் மறைமுக தொடர்பில் இருக்கிறார்கள் என்று தவெக தலைவர் விஜய் கூறுகிறார். பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது, வாஜ்பாயுடன் இணைந்து ஐந்து வருட மத்திய அமைச்சரவையில் திமுக பங்கேற்றது. காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து 15 ஆண்டுகளாக திமுக கூட்டணி வைத்திருந்தது,மேலும் கச்சத்தீவை மீட்பது உள்ளிட்ட எந்த ஒரு செயல்பாடுகளிலும் திமுக ஈடுபடவில்லை. இதில் எந்த வகையில் திமுக பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி அமைத்துள்ளது? புதிய கட்சி ஆரம்பித்து ஊர் ஊராக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய்க்கு பாஜக கட்சி குறித்து என்ன ஞானம் உள்ளது என தெரியவில்லை” என விமர்சித்தார். 

Similar News