தினகரனுடன் அண்ணாமலை பேச்சுவார்த்தை!!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்ததாக தெரிகிறது.;
By : King 24x7 Desk
Update: 2025-09-23 04:16 GMT
ttv and annamalai
சென்னை அடையாறில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்துக்கு சென்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, சுமார் ஒன்றரை மணி நேரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தேசிய ஜனநாயக் கூட்டணியில் மீண்டும் இணையுமாறு தினகரனிடம் அண்ணாமலை வலியுறுத்தியதாக தெரிகிறது. கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்ய தினகரனிடம் வலியுறுத்துவேன் என அண்ணாமலை ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும்வரை பாஜகவுடன் கூட்டணிக்கு வரமாட்டேன் என டிடிவி தினகரன் கூறி வருகிறார்.