திமுகவினர் அதிர்ச்சி..! திடீரென தவெகவில் இணைந்த திமுக முன்னாள் ஒன்றிய செயலர்!!

திமுக முன்னாள் ஒன்றிய செயலர் திடீரென தவெகவில் இணைந்தது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.;

Update: 2026-01-06 04:34 GMT

மதுரை திருப்பரங்குன்றம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன். இவர் 30 ஆண்டுகளாக தி.மு.க.,வில் இருந்தார். கிளை, ஒன்றிய செயலாளர், 16 ஆண்டுகள் கவுன்சிலர் பதவி, மாவட்ட திட்டக் குழு துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். இந்நிலையில் இன்று அவர், த.வெ.க., தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார். இதன் பிறகு அவர் கூறியதாவது: திமுகவில் ஜனநாயகம் இல்லை. சமத்துவமும் இல்லை. நான் ஆன்மிகவாதி. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உச்சி துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை சிறுபான்மையினரின் ஓட்டு அரசியலுக்காக திமுக மறுத்துவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களில் நானும் ஒருவர். திமுகவில் ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்தாலும் ஹிந்து என்ற உணர்வில் இருந்த நான் அச்சம்பவத்தால் மனஉளைச்சலில் இருந்தேன். தற்போது தவெகவில் இணைந்துள்ளேன் என்று அவர் கூறினார்.

Similar News