தொகுதி மாறும் உதயநிதி ஸ்டாலின்? சேப்பாக்கம் நிர்வாகிகளிடம் சொன்ன வார்த்தை! அப்போ அதெல்லாம் உண்மை தானா?
தொகுதி மாறும் உதயநிதி ஸ்டாலின்? சேப்பாக்கம் நிர்வாகிகளிடம் சொன்ன வார்த்தை! அப்போ அதெல்லாம் உண்மை தானா?;
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் யார் நின்றால் அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். ஏனென்றால் இந்த தொகுதி திமுகவின் கோட்டை என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் இன்று பேசி உள்ளார். இதனால் நடைபெற உள்ள தேர்தலில் அவர் அந்த தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் 2021 சட்டசபை தொகுதியில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தற்போது அந்த இலாகாவுடன் துணை முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.
இந்நிலையில் தான் தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுகவும் முழு வீச்சில் ரெடியாகி வருகிறது. இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கினார். அதன்பிறகு திமுக நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசினார். அப்போது, ‛‛சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுகவின் கோட்டை. யரை நிறுத்தினாலும் கடந்த முறையை விடஅதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்'' என்று கூறினார். இதுதான் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. யாரை நிறுத்தினாலும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதால் அவர் இந்த முறை அந்த தொகுதியில் போட்டியிடமாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் வரும் சட்டசபை தேர்தலில் தொகுதி மாற உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை விட்டுவிட்டு தனது தாத்தா தாத்தா கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூருக்கு செல்லும் யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
திருவாரூர் தொகுதி என்பது திமுகவின் கோட்டையாக உள்ளது. 1996, 2001, 2006, 2011, 2016, 2021 என 6 தேர்தல்களில் திமுகவின் வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 2011 மற்றும் 2011 ஆகிய தேர்தல்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமோக வெற்றி பெற்றிருந்தார்.பிறகு 2016, 2021 ஆகிய தேர்தல்களில் திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிட்டு வென்றார். இப்போது அவர் 2வது முறையாக எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் தான் அங்கு உதயநிதி ஸ்டாலின் களமிறங்கலாம் என்று கூறப்படும் நிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற வேண்டும் என்று அவர் பேசி உள்ளார். இதனால் வரும் சட்டசபை தேர்தலில் உதயநிதி ஸ்டாலினின் தொகுதி மாற்றம் உண்மைதானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.