ஆட்டத்தையே மாற்றிய ஸ்டாலின்.. மொத்தமாய் மாறும் அரசியல்! காங்கிரஸ் வாய் பேசினால் இனி அவ்வளவு தான்!

ஆட்டத்தையே மாற்றிய ஸ்டாலின்.. மொத்தமாய் மாறும் அரசியல்! காங்கிரஸ் வாய் பேசினால் இனி அவ்வளவு தான்!;

Update: 2026-01-08 05:37 GMT


2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் இதுவரை இடம் பெறாத தேமுதிக இந்த முறை திமுகவுடன் கைகோர்க்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான காங்கிரஸ், இந்த முறை ஆட்சியிலும் பங்குகேட்டு வலியுறுத்தி வரும் நிலையில், அந்த கட்சியை திமுக கழற்றி விடுவது உறுதி எனச் சொல்லும் திமுகவினர். அதற்கு பதிலாக தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட பின் இதுவரை திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக போன்ற பல கட்சிகள் உள்ளன. ஆனால் இந்த முறை காங்கிரஸ், ஆட்சியில் பங்குகேடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது.

மாநில அரசின் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை திமுக ஏற்கவில்லை. இருந்தாலும் காங்கிரஸ் தன் கோரிக்கையை விட்டு க்கொடுக்காமல் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், இதனை திமுக தலைமை ரசிக்கவில்லை.

இந்நிலையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் புதிய அரசியல் சக்தியாக உருவாகியுள்ளதால், 2026 தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது. இதனால் திமுக, கூட்டணி கணக்குகளில் பெரிய மாற்றங்களை செய்ய யோசித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் பிரச்சினையில்லை, அதற்கு பதிலாக தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வரலாம் என்ற நிலைப்பாட்டில் சில திமுக தலைவர்கள் உள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.

தேமுதிக இதற்கு முன்பு ஒருபோதும் திமுகவுடன் கூட்டணி அமைத்ததில்லை. ஆனால், 2026 தேர்தலில் 9 தொகுதிகள் வழங்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய் பிரபாகரன் போட்டியிட விரும்பும் சில குறிப்பிட்ட தொகுதிகளையும் ஒதுக்கிக் கொடுக்கலாம் என்ற முன்மொழிவும் வந்திருக்கிறது என தெரிகிறது. காங்கிரஸ் வெளியேறினால், கடந்த முறை அவர்கள் போட்டியிட்ட 25 தொகுதிகள் திமுக கைக்கு திரும்பும்.

அதில் 9 தொகுதிகளை தேமுதிகவிற்கு கொடுத்து, மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு சிலவற்றை வழங்கலாம் என்ற திட்டமும் பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், திமுக தன் நேரடி போட்டித் தொகுதிகளையும் அதிகரிக்க விரும்புகிறது. மறுபுறம், அதிமுக - பாமக - பாஜக கூட்டணி ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுகவுடன் இருந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக வாக்குறுதியை காப்பாற்றவில்லை என குற்றம் சாட்டி, அந்த கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. எனவே, அதிமுக - தேமுதிக கூட்டணி மீண்டும் உருவாகும் வாய்ப்பு மங்கலாகவே உள்ளது.

கடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தேமுதிக போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் விருதுநகர் உள்ளிட்ட சில தொகுதிகளில் நல்ல வாக்கு வித்தியாசம் பெற்றது என்பதை கட்சி சுட்டிக்காட்டி வருகிறது. இதனால், 2026 தேர்தலில் சரியான கூட்டணி அமைந்தால் தங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கும் என அவர்கள் நம்புகின்றனர். காங்கிரஸ் மீதான திமுகவின் கடுமையான போக்கு, தேமுதிக கூட்டணி, நடிகர் விஜயின் கட்சி என இவை அனைத்தும் சேர்ந்து தமிழக அரசியலில் அடுத்த சில மாதங்களில் பெரிய மாற்றங்கள் நிகழும் சாத்தியத்தை உருவாக்கியிருக்கிறது.

Similar News