அதிமும- பாமக கூட்டணி உறுதியானது: ஈபிஎஸ்!!

அதிமும- பாமக கூட்டணி உறுதியானது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2026-01-07 05:08 GMT

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாமக தலைவர் அன்புமணி தற்போது சந்தித்துள்ளார். வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாமக தனது கூட்டணி நிலைப்பாட்டை தெரிவிக்காத நிலையில், இந்த சந்திப்பு பேசு பொருளாகி உள்ளது. தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிடுவது, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து இருவரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிடும். இது இயற்கையான கூட்டணி. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

Similar News