அக்.11ல் நெல்லையில் விஜய் பிரச்சாரம்- அனுமதி கேட்டு தவெகவினர் மனு!!

அக். 11ல் நெல்லை வரும் விஜய்க்கு 5 இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் தவெகவினர் மனு அளித்துள்ளனர்.;

Update: 2025-09-15 12:40 GMT

vijay

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலங்களே திமுக அதிமுக தேமுதிக பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த சனிக்கிழமை அன்று திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ள நடிகர் விஜய் நெல்லைக்கு அக்டோபர் 11 ல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வர இருக்கிறார். அதற்கு அனுமதி பெற விதமாக நெல்லை மாவட்ட தமிழக வெற்றி கழகத்தினர் மாவட்ட இணை செயலாளர் மரிய ஜான் தலைமையில் இன்று நெல்லை மாநகர ஆணையர் சந்தோஷ் ஹாதிமணியிடம் நடிகர் விஜய் நெல்லை மாநகர் பகுதிகளான நீதிமன்றம் அருகே, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, வண்ணாரப்பேட்டை, வாகையடி முக்கு, மேலப்பாளையம் உள்ளிட்ட 5 இடங்களில் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வேண்டும் எனக்கூறி மனு கொடுத்துள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல்துறை ஆணையர் 2 நாட்களில் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி எந்தெந்த இடங்களில் நடிகர் விஜய் பிரசாரம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவிக்கிறோம் என கூறியிருக்கின்றார்.விஜய் வருகைக்காக நெல்லை மாவட்ட தமிழக வெற்றி கழகத்தினர் தங்களது தேர்தல் பிரச்சாரப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

Similar News