6 பேர் என்னை சந்தித்தது பச்சைப் பொய்: எடப்பாடி பழனிசாமி

6 பேர் என்னை சந்தித்தது பச்சைப் பொய் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;

Update: 2025-09-05 13:44 GMT

eps

6 பேர் என்னை சந்தித்தது பச்சைப் பொய் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுகவில் பிரிந்தவர்களை சேர்க்கவில்லை என்றால் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை நாங்கள் செய்வோம். எடப்பாடியிடம் 6 அமைச்சர்கள் சென்று , பிரிந்து போனவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி இடம் வலியுறுத்தினோம், அதை எதையும் கேட்க அவர் தயாராக இல்லை. வெளியே சென்றவர்களை தேர்தலுக்கு முன் கட்சியில் சேர்க்க வேண்டும், 10 நாட்கள்தான் காலக்கெடு. அதற்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்” எனக் கூறினார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ல எடப்பாடி பழனிசாமி, “பிரிந்து சென்றவர்கள் இன்று நிறைய அவதாரம் எடுக்கின்றனர். ஆறு பேர் என்னை சந்தித்ததாக கூறியது பச்சைப் பொய்” என்றார்.

Similar News