அமமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
அமமுக சார்பில் ஜெயலலிதா 7 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
By : King 24x7 Website
Update: 2023-12-06 06:52 GMT
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் ஆணைக்கிணங்க அனைத்து மாவட்டங்களிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7 ஆம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி நாமக்கல் வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ராசிபுரம் நகரக் கழகத்தில் சார்பாக ஜெயலிலதா 7 ஆம் ஆண்டு நினைவஞ்சலி மாவட்ட கழக செயலாளர் ஏ.பி.பழனிவேல் முன்னிலையில் நடைபெற்றது. ராசிபுரம் நகர கழக செயலாளர் எஸ். வேலுச்சாமி, தலைமை தாங்கினார். புதிய பேருந்து நிலையம் அருகே அலங்கரிப்பட்ட ஜெயலிலதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி கழக நிர்வாகிகள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதில் மாவட்ட கழக அவைத் தலைவர் எஸ். பன்னீர்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்கள் க. முருகன், அம்பிகா, பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராசிபுரம் ராஜா, நாமகிரிப்பேட்டை கிழக்கு, மேற்கு சதீஷ்குமார், சுப்பராயன், வெண்ணந்தூர் கந்தசாமி, முருகேசன், பேரூராட்சி செயலாளர்கள் ரஞ்சித்குமார், பெரியசாமி, க. வெங்கடேஷ், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் குட்டி நடராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மேகநாதன், மேலும் ராசிபுரம் நகரக் கழக தலைவர் பூபதி, துணைச் செயலாளர் தர்மராஜ், துணைச் செயலாளர் ஜெயக்குமார், வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.