நீங்களும் ஜெயிச்சு வாருங்கள்.. நாங்களும் ஜெயிச்சு வரோம்.. மாணவர்களிடம் முதல்வர் சொன்ன பன்ச்

நீங்களும் ஜெயிச்சு வாருங்கள்.. நாங்களும் ஜெயிச்சு வரோம்.. மாணவர்களிடம் முதல்வர் சொன்ன பன்ச்;

Update: 2026-01-06 04:46 GMT

நீங்களும் ஜெயிச்சு வாருங்கள்.. நாங்களும் ஜெயிச்சு வரோம்.. மாணவர்களிடம் முதல்வர் சொன்ன பன்ச்

தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின் AI என்பது மனிதக் குலத்திற்குக் கிடைத்துள்ள 2வது நெருப்பு போன்ற கண்டுபிடிப்பு என்றும் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். மேலும், அரசுத் திட்டங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் வென்று வர வேண்டும் என்றார்.

தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. "உலகம் உங்கள் கையில்" என்ற இந்த நிகழ்வில் 10 லட்சம் லேப்டாப் வழங்கப்படுகிறது.

ஸ்டாலின் பேச்சு

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மாணவர்களைப் பார்த்தவுடன் எனக்குப் புது Vibe வந்துவிட்டது.. எதிர்காலமே மாணவர்கள் கையில் தான் இருக்கிறது; அதை உரக்கச் சொல்லவே இந்த நிகழ்வு நடக்கிறது.. புத்தாண்டை மாணவர்களுடன் தொடங்குவது பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கிறது.. அடுத்த தலைமுறை மாணவர்களை அடிப்படையாக வைத்தே இந்த நிகழ்வு நடைபெறுகிறது.. மாணவர்களை வளர்த்து எடுத்தால் தான் மாநிலம் வளரும், நாடு வளரும்!

அறிவுக்கு முக்கியத்துவம் தரும் இயக்கம் திராவிட இயக்கம்.. உலகம் உங்கள் கையில் என்பது வெறும் தலைப்பு இல்லை.. அதுதான் உண்மை.. மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இன்று 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது..

25 ஆண்டுகளுக்கு முன்பே

இனி வரும் காலம் தொழில்நுட்பத்தின் காலகட்டம் என்பதை உணர்ந்து 25 ஆண்டுகளுக்கு முன்பே ஐடி பாலிசி, டைடில் பார்க் கொண்டு வந்தார் கருணாநிதி. இதனால் தான் ஐடி துறையில் இன்று தமிழர்கள் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள்.

இரண்டாவது நெருப்பு AI

மனித இனம் நெருப்பையும் சக்கரத்தையும் கண்டுபிடித்த காலத்திலேயே இது போதும் எனச் சுணங்கி இருந்தால் இன்று விண்வெளியில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்க முடியுமா.. மனிதர்களுக்குக் காலம் கொடுத்துள்ள இரண்டாவது நெருப்பு தான் ஏஐ. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவே இன்று லேப்டாப் கொடுத்துள்ளோம்.

நீங்க என்ன படிக்கிறீர்கள், எவ்வளவு டிகிரி வாங்கியுள்ளீர்கள்.. என்ன வேலையில் இருக்கிறீர்கள். உங்கள் வளர்ச்சியால் சமூகத்திற்கு என்ன செய்கிறீர்கள், சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய இளைய தலைமுறையினர் மதிப்புமிக்க மனிதர்களாகப் பெருமைமிக்க தமிழர்களாக உயர்ந்து நிற்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.

அப்டேட் ஆவது கட்டாயம்

உங்கள் கைகளில் இருக்கும் லேப்டாப் பரிசு திட்டம் இல்லை. இது உலகை நீங்கள் ஆள கைகளுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு.. எங்களுக்கு இது செலவுத் திட்டம் இல்லை. எதிர்காலத் தலைமுறையினர் கல்வித் திட்டத்திற்கான முதலீடு தான் இது..

நீங்கள் படிக்க எல்லா வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறோம். உங்கள் வாழ்க்கைக்கு டிகிரி மட்டும் போதும் என நினைத்துவிடாதீர்கள். அப்கிரேட் ஆகும் தொழில்நுட்பத்திற்கு இணையாக நீங்களும் அப்டேட் ஆக வேண்டும். இனிமேல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அப்டேட் ஆவது ஆப்ஷனல் இல்லை. உங்கள் துறையில் நிலைத்து நிற்க அது கட்டாயமாகிறது. தொழில்நுட்பம் அந்தளவுக்கு முன்னேறிவிட்டது.

ஜெயிச்சு வாங்க

நான் சொல்கிறேன்.. AIஆல் ஒருபோதும் மனிதர்களால் மாற்றிவிட முடியாது.. நமது வேலைகளை விரைவாகச் செய்யவே AI உதவும். முன்பெல்லாம் அறிவை பெறப் பல புத்தங்களைத் தேடித் தேடி படிக்க வேண்டி இருந்தது. இப்போது எல்லாமே உங்கள் உள்ளங்கையில் வந்துவிடுகிறது. நமக்கு இன்னும் வளர்ச்சி வேண்டும். தமிழ்நாடு இளைய தலைமுறையினரை நம்பி தான் இருக்கிறது. நீங்கள் ஜெயிச்சு வாங்க.. நாங்களும் ஜெயிச்சு வருகிறோம். எப்போதும் உங்களுடன் இருப்போம்" என்றார்.

Similar News