நாமக்கல்லில் திமுக கலைஞர் அறிவாலயம், இனமானப் பேராசிரியர் கூட்டரங்கு திறப்பு
நாமக்கல்லில் திமுக கலைஞர் அறிவாலயம், இனமானப் பேராசிரியர் கூட்டரங்கை இராஜேஸ்குமார் எம்.பி, அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தனர்
நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழக அலுவலகம் புனரமைக்கப்பட்டு கலைஞர் அறிவாலயம் மற்றும் இனமான பேராசிரியர் கூட்டரங்கு திறப்பு விழா நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.இராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்டக் கழக அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் மாவட்ட அவைத் தலைவர் சி.மணிமாறன் கழக இரு வண்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு கலைஞர் அறிவாலயம் இனமான பேராசிரியர் கூட்ட அரங்கை திறந்து வைத்தார். அலுவலகத்தை மாநில தீர்மானக் குழு உறுப்பினர் பார்.இளங்கோவன் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் நாமக்கல் ப.ராணி, இரா.நக்கீரன், ப.கைலாசம், சி.ஆனந்தகுமார், முத்துவேல் இராமசுவாமி, நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், நகர திமுக செயலாளர்கள் ராணா ஆனந்த், எஸ்.பூபதி, அ.சிவக்குமார், என்.ஆர்.சங்கர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே.பி.இராமசுவாமி, அ.அசோக்குமார், வி.பி.பழனிவேல், கே.பி.ஜெகநாதன், பெ.நவலடி, ஆர்.எம்.துரைசாமி, வி.கே.பழனிவேல், எம்.பி.கெளதம், பி.பாலசுப்ரமணியம், ஆர்.ஜெயப்பிரகாஷ், எஸ்.செந்தில் முருகன், பேரூர் கழகச் செயலாளர்கள், நகர் மன்றத் தலைவர்கள் து.கலாநிதி, முனைவர் கவிதா சங்கர், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் சி.விஸ்வநாத், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பொன்.சித்தார்த், மகளிர் அணி நிர்வாகிகள் ஜோதிலட்சுமி, கௌரி மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.