வெளிநாடுகளில் படிக்க செல்லும் மாணவர்களின் முதல்முறை பயண செலவை அரசு ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Update: 2024-08-02 06:20 GMT

stalin

வெளிநாடுகளில் படிக்க செல்லும் மாணவர்களின் முதல்முறை பயண செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, 54 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் சாரை சாரையாக உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிக்கச் செல்கின்றனர் என முதல்வர் கூறினார்.

Similar News