நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம்
By : King 24x7 Desk
Update: 2024-08-02 06:27 GMT
நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வினாத்தாள் கசிவைத் தடுக்க சைபர் செக்யூரிட்டி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். வினாத்தாள்களை தயாரிப்பது முதல் சரிபார்ப்பது வரை கடும் சோதனைகளை உறுதிசெய்ய வேண்டும். வினாத்தாள்களை கையாளுதல் போன்றவற்றை சரிபார்க்க வழிகாட்டு நெறிமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். அனைத்து நீட் தேர்வு மையங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.