மூட நம்பிக்கைப் பேச்சாளரை கைது செய்க: ராமதாஸ்
By : King 24x7 Desk
Update: 2024-09-06 08:25 GMT
மாணவர்களின் மனதில் நஞ்சைக் கலக்கும் மனிதர்களை அழைத்து வந்து இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் நிகழ்ச்சிக்கு காரணமானவர்கள் எத்தகைய உயர்பொறுப்பில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.