பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – திருச்சி இடையே இன்டர்சிட்டி சிறப்பு ரயில்!!
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம் – திருச்சி இடையே பகல் நேர இன்டர்சிட்டி சிறப்பு ரயில், வரும் 11ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் (06190) செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் 5 நாட்களும் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு 6.24 மணிக்கும், கும்பகோணத்திற்கு 6.58 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 7.28 மணிக்கும், சீர்காழிக்கு 7.52 மணிக்கும், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து இந்த ரயில் (06191) மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு சீர்காழிக்கு இரவு 7.52 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 8.43 மணிக்கும், கும்பகோணத்திற்கு 9.18 மணிக்கும், தஞ்சைக்கு 10.13 மணிக்கும், இரவு 11.35 மணிக்கு திருச்சிக்கு செல்லும். இந்த ரயிலில் 12 இருக்கை பெட்டிகள், 6 படுக்கை பெட்டிகள் உள்பட மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.