குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு!!
By : King 24x7 Desk
Update: 2024-10-25 06:48 GMT
குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 14 அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. காலியாக உள்ள குற்றவியல் துறை துணை இயக்குனர் 5 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிறப்பு கவனம் எடுத்து அரசிடம் தெரிவித்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய குற்றவியல் துறை இயக்குனரும், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருமான அசன் முகமது ஜின்னாவுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.