கல்லூரி மீது புகார் அளித்த மாணவியை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
By : King 24x7 Desk
Update: 2024-11-06 11:52 GMT
கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்ததாக புகார் அளித்த மாணவியை செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி மறுத்ததை எதிர்த்து தொடரபட்ட வழக்கில் மாணவியை தேர்வு எழுத அனுமதிக்குமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கல்வி கட்டணம் மூலம் ரூ.15 கோடி வரை மாணவர்களிடம் முறைகேடாக வசூலித்ததாக குருநானக் கல்லூரி மீது மாணவி லோகேஸ்வரி புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மாணவியை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி லோகேஸ்வரி புகார் அளித்தார். அதில் உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது.