முரசொலி அறக்கட்டளை பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருப்பதாக உச்சநீதிமன்றம் பாராட்டு!!

Update: 2024-12-05 08:28 GMT

supreme court

முரசொலி அறக்கட்டளைக்கு எதிராக அவதூறு பரப்பும் எண்ணம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். முரசொலி அறக்கட்டளையின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க ஒருபோதும் எண்ணியது இல்லை என்றும் எஸ்சி, எஸ்டி ஆணைய துணைத்தலைவராக இருந்தபோது வந்த புகாரின் பேரிலேயே முரசொலி அறக்கட்டளை பற்றி பேசினேன் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார். களங்கம் கற்பிக்கும் நோக்கம் இல்லை என எல்.முருகன் கூறிவிட்டதால் அவதூறு வழக்கை தொடர விரும்பவில்லை என்றும் முரசொலி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. முரசொலி அறக்கட்டளை பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Similar News