முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு காவல்துறை பொறுப்பல்ல: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் அறிக்கை தாக்கல்!!
By : King 24x7 Desk
Update: 2024-12-28 05:51 GMT
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை குறித்த அறிக்கையை சீலிட்ட உறையில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காவல்துறை. அதில், “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான எஃப்.ஐ.ஆர். தானாகவே லாக் ஆகி விடும். ஆனால் சிட்டிசன் போர்ட்டலில் 14 பேர், ஓ.டி.பி.யை பயன்படுத்தி முதல் தகவல் அறிக்கையை பார்த்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையை பார்த்த 14 பேரின் விவரங்கள் உள்ளன.முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு காவல்துறை பொறுப்பல்ல; தேசிய தகவல் மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.