புதுச்சேரி பட்டானூரில் பாமக சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல்!!
By : King 24x7 Desk
Update: 2024-12-28 09:38 GMT
புதுச்சேரி பட்டானூரில் பாமக சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமனம் செய்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்த சில மாதங்களே ஆனவருக்கு இளைஞரணி பதவி கொடுப்பதா என்று அன்புமணி கட்டமாக கேள்வி எழுப்பினார். நான்தான் கட்சியை நிறுவினேன், நான்தான் முடிவெடுப்பேன் என ராமதாஸ் பதிலடி கொடுத்தார்.