சபரிமலையில் மதுவிற்ற ஓட்டல் ஊழியர் கைது!!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நேற்றுமுன்தினம் (26-ந்தேதி) முடிந்தது. இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனில் 32.50 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றுள்ளனர். கடந்த ஆண்டு மண்டல சீசனை காட்டிலும் 4.07லட்சம் பக்தர்கள் அதிகமாக வந்துள்ளனர். இந்தநிலையில் சபரிமலை சன்னிதானம் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்ற ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லம் கிளி கொல்லூர் பகுதியை சேர்ந்த பிஜூ(வயது51) என்பவர் சன்னிதானம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்திருக்கிறார். அவர், தான் பணிபுரிந்த ஓட்டலில் மதுபானத்தை பதுக்கிவைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அவர் பணிபுரிந்த ஓட்டலுக்கு சென்று அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4.5 லிட்டர் வெளிநாட்டு மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.