வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்!!
By : King 24x7 Desk
Update: 2024-12-30 07:12 GMT
2023-24-ம் நிதியாண்டுக்குரிய (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) வருமான வரி கணக்கை தனிநபர்கள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைவரும் 2024-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி, ஏராளமானோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்தனர். இந்த காலகட்டத்துக்குள் வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனில் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால் ஆயிரம் ரூபாயும், ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் ரூ.5 ஆயிரமும் அபராதமாக செலுத்தி வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ந்தேதி கடைசி நாள் என காலக்கெடு விதிக்கப்பட்டது. அதன்படி அபராத்துடன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.