தொடர்ந்து உயர்கிறது தங்கம் விலை!!

Update: 2025-01-02 08:34 GMT

gold

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் பெரிய அளவில் மாற்றமில்லாமல் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.56,880-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,440-க்கும் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,180-க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களாக மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 99 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 99 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News