சென்னையில் அனுமதி பெறாத இன்டர்நெட் கம்பங்களுக்கு அபராதம்: சென்னை மாநகராட்சி

Update: 2024-12-30 09:17 GMT

சென்னை மாநகராட்சி

சென்னையில் அனுமதி பெறாமல், ஒழுங்கற்ற முறையில் இன்டர்நெட் நிறுவன கம்பங்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும். சென்னையில் 15 மண்டலங்களிலும் அனுமதி பெறாமல் நடப்பட்ட இன்டர்நெட் கம்பங்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும். அனுமதி பெறாமல் நடப்பட்ட இன்டர்நெட் கம்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஒழுங்கற்ற முறையில் நடப்பட்ட இன்டர்நெட் கம்பங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம். அனுமதித்ததை விட அதிக கம்பங்கள் நடப்பட்டிருந்தால் கம்பங்களுக்கு தலா ரூ.75,000 அபராதம். அனுமதி பெறாத இன்டர்நெட் கம்பங்களுக்கு அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

Similar News