செஸ் வீரர் கார்ல்ஸன் எதிர்ப்பைத் அடுத்து வீரர்களின் உடை கட்டுப்பாடுகளை தளர்த்தியது சர்வதேச செஸ் கூட்டமைப்பு!!
By : King 24x7 Desk
Update: 2024-12-30 09:19 GMT
வீரர் கார்ல்ஸன் எதிர்ப்பைத் அடுத்து வீரர்களின் உடை கட்டுப்பாடுகளை சர்வதேச செஸ் கூட்டமைப்பு தளர்த்தியது. நியூயார்க்கில் நடந்த ரேபிட் செஸ் போட்டிக்கு ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வந்ததால் மேக்னஸ் கார்ல்ஸனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மரபான உடைகளையே செஸ் வீரர்கள் அணிந்து விளையாட வேண்டும் என்பது சர்வதேச செஸ் கூட்டமைப்பின் விதிமுறையாகும். பல தரப்பினரும் விமர்சித்ததை அடுத்து, அலுவல் பூர்வ உடை அணிய வேண்டும் என்ற விதியை ஃபிடே தளர்த்தியது.