முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது: உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு தமிழக விவசாயிகள் வரவேற்பு!!

Mullai
முல்லைப்பெரியாறு அணையின் பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்பு குறித்து கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது. அணையின் வயது 130 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் எத்தனையோ பருவ மாற்றங்களை கண்டும் இன்னும் உறுதியாகவே உள்ளது. அணை உடைந்து விடும் என தெரிவித்து வருவது காமிக்ஸ் கதைகளைப் போல கற்பனையாக உள்ளது என்று தெரிவித்தனர். இத்தனை ஆண்டுகள் கடந்தும் அணை பலமாக இருப்பதற்கு இதனை கட்டிய பொறியாளர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். இதற்கு 5 மாவட்ட தமிழக விவசாய சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.