மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12,763 கன அடியாக அதிகரிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2024-10-01 04:04 GMT
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,284 கன அடியிலிருந்து 12,763 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாயில் 700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 95.08 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 58.650 டி.எம்.சி-யாக உள்ளது.