கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு: தமிழக அரசு
By : King 24x7 Desk
Update: 2025-01-30 08:53 GMT

Tn govt
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு தோராயமாக 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோ-ஆப்டெக்சில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள் முதல் தலைமை பொது மேலாளர் வரை 10 நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி 10 நிலைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியையும் உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.