கல்வராயன் மலைப்பகுதி பற்றி அறிக்கை தர தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் கெடு: சென்னை உயர்நீதிமன்றம்
By : King 24x7 Desk
Update: 2024-08-02 06:30 GMT
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வறிக்கை தர தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் அவகாசம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தையடுத்து கல்வராயன் மலை மக்கள் மேம்பாடு பற்றி தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு ஆகஸ்ட் 21 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.