சுற்றுலாப் பயணிகள் கார் மீது பாறை சரிந்து பெண் பலி 2 பேர் படுகாயம்!!
By : King 24x7 Desk
Update: 2024-12-30 07:18 GMT
மும்பையை சேர்ந்த பிரியா என்ற பெண் தனது கணவருடன் இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். அவர்கள் காரில் இமாச்சல பிரதேசங்களை சுற்றி பார்த்தனர். தற்போது அங்கு கடும் பனி பொழிவு இருப்பதால் அடிக்கடி பனி சறுக்கு ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகள் காரில் சண்டிகர்- மனாலி நெடுஞ்சாலையில் சென்ற போது மாண்டி அருகே திடீரென பாறைகள் சரிந்து கார் மீது விழுந்தது. இதில் கார் நொறுங்கி பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் மற்றும் டிரைவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.