மஹாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!!

Update: 2026-01-15 04:35 GMT

மராட்டியத்தில் மும்பை, தானே, நவிமும்பை, புனே, நாக்பூர் உள்பட 29 மாநகராட்சிகள் உள்ளன. இந்த அனைத்து மாநகராட்சிகளுக்கும் ஜனவரி 15-ந் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து தேர்தல் பணிகள் தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வந்த பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றது. 29 மாநகராட்சிகளிலும் இன்று வாக்குப்பதிவு காலை 7.30 மணிக்கு தொடங்கியது.

Similar News