மலேசியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக தகவல்!!
By : King 24x7 Desk
Update: 2025-01-30 09:18 GMT

malaysia flood
மலேசியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழையினால் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கிட்டத்தட்ட 5000-த்திற்கும் மேற்பட்டார் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மலேசியாவின் சபா மற்றும் சரவாக்கின் சில பகுதிகளில் 700 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, நாளை வரை கனமழை தொடரும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.