திருவள்ளுவர் சிலையை Statue Of Wisdom-ஆக கொண்டாடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
By : King 24x7 Desk
Update: 2024-12-20 12:00 GMT
திருவள்ளுவர் சிலையை Statue Of Wisdom-ஆக கொண்டாடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த வள்ளுவருக்கு, குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து 25 ஆண்டுகள். மூப்பிலா தமிழில் முப்பால் படைத்த திருவள்ளுவருக்கு கலைஞர் அமைத்த சிலையை Statue Of Wisdom ஆக கொண்டாடுவோம். கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.