1200-க்கும் மேற்பட்ட மருத்துவ மேற்படிப்பு இடங்கள் பறிபோகும் அபாயம்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
By : King 24x7 Desk
Update: 2025-01-30 08:59 GMT

மா.சுப்பிரமணியன்
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், முதுநிலை மருத்துவ படிப்புகளில் மாநில அரசுக்கென தனி ஒதுக்கீடு கூடாது என்ற உத்தரவு மாநில உரிமைகளுக்கு எதிரானது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மருத்துவக் கட்டமைப்பு அதிகமாக உள்ளது. 1200-க்கும் மேற்பட்ட மருத்துவ மேற்படிப்பு இடங்கள் பறிபோகும் அபாயம். சட்ட ரீதியான ஆலோசனை நடத்தி, தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். மருத்துவப்படிப்பிற்கான மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறினார்.