கேலோஇந்தியா விளையாட்டு போட்டிகள் குறித்த விழிப்புணர்வு
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்தப்பட்ட போட்டிகள்;
By : King 24x7 Website
Update: 2024-01-09 11:03 GMT

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்தப்பட்ட போட்டிகள்
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து திருப்பூர் மாவட்ட அளவில் மினி மாரத்தான், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் ,ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசுகளை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ்,மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்,துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி ஆணையாளர்பவன்குமார்ஜிகிரியப்பனவர், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணாக்கர்கள் பலர் கலந்துகொண்டனர்.