ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் தங்க கிரீடம்
புகழ்பெற்ற ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் காணிக்கையாக 7-லட்சம் மதிப்பிலான 7-கிலோ எடையுள்ள தங்க கிரீடத்தை வழங்கினார்கள்
காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சொர்க்கவாசல் இருக்கும் ஒரே கோவிலான ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாளுக்கு, காஞ்சிபுரத்தை சேர்ந்த பக்தர்களான B.M. மிதுலன், பழனி , கோவிந்தராஜ், நாராயணன் ஆகியோர் தங்க கிரீடம் சாற்ற விரும்பினர்.
அதன்படி ரூ.7 லட்சம் மதிப்புள்ள சுமார் 6.400 கிலோ எடை கொண்ட தங்க கிரீடம், காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பிரபல B.M. மிதுலன் நகைக்கடையில் தயாரிப்பட்டது.
காணிக்கையாக காஞ்சீபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு வழங்கினர்.
இந்த தங்க கிரீடத்தை கோவில் அறங்காவலர் குழுவினர் இடம் வழங்கி சன்னதி வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலுக்கு வந்து அஷ்டபுஜ பெருமாளுக்கு சாற்றினார்.
பிறகு கற்பூர, தீபாராதனை காட்டப்பட்டது.
புரட்டாசி சனிக்கிழமை ஓட்டியும், முதல் முறையாக பெருமாளுக்கு தங்க கிரீடம் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்ததை ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.