108 பெண்கள் அம்மனுக்கு திருவிளக்கு பூஜை வழிபாடு

பெரிய காஞ்சிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி ஒட்டி உலக நன்மைக்காக 108 விளக்கு பூஜை மற்றும் 108 சுமங்கலி பூஜை நடைபெற்றது;

Update: 2024-10-12 08:30 GMT

108 பெண்கள் அம்மனுக்கு திருவிளக்கு பூஜை வழிபாடு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் அங்காளம்மன் கோவில் வீதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி நிறைவு நாள் அன்று விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம் மேலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அமாவாசை ஊஞ்சல் சேவை, திருவிளக்கு பூஜை, மஞ்சள் காப்பு சிறப்பு அலங்காரம், அம்மன் புறப்பாடு, சந்தன காப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.



அந்தவகையில் நவராத்திரி நிறைவு நாள் இன்று ஆயுத பூஜை ஒட்டி உலக நன்மைக்காக வேண்டி கொண்டு 108 பெண்கள் திருவிளக்கு பூஜை கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டவர்.

மேலும் உலக நன்மை வேண்டி 108 பெண்களுக்கு சுமங்கலி பூஜை நடைபெற்றது.


கோவிலில் நடைபெற்ற விளக்க பூஜை மற்றும் சுமங்கலி பூஜைக்கான ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News