ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ₹2 கோடி வைர கிரீடம் சாத்தும் விழா

மீஞ்சூர் அருகே உள்ள புங்கம் மேடு அருள்மிகு ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ₹2 கோடி வைர கிரீடம் சாத்தும் விழா நடந்தது.

Update: 2024-06-09 12:15 GMT

வைர கிரீடம் சாத்தும் விழா 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட புங்கம் மேடு கிராமத்தில் பிரசித்து பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோயில் உள்ளது, இங்கு ஆண்டுதோறும் பெருமாளுக்கு ராமானுஜரின் 1007 ஆம் ஆண்டு திரு அவதார தினத்தை முன்னிட்டு ₹2 கோடி வைர கிரீடம் சாத்தும் விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதன்படி 108 கலசங்களில் திருமஞ்சனம், ஈர வாடை தீர்த்தம், பரிவட்ட பங்கு மணம் சமர்ப்பித்தல் நடைபெற்றது,

தொடர்ந்து அடியார்களின் பஜனை கோஷத்துடன் சீர் வரிசைகள் அணி வகுத்து வர வைர கிரீடம் ஆனது, பிரதான மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக அலங்கார மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டது, ஸ்ரீமந் நாராயண நந்தவனத்தில் 1007 ஆம் ஆண்டு ஸ்ரீ பகவத் ராமானுஜரின் திரு அவதார தினத்தை முன்னிட்டு வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது இதனை அடுத்து, ஸ்ரீ சின்ன ஜீயர் உ.வே. சுதர்சனாச்சாரயர் சுவாமிகள் வைர கீரிடத்தை ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு சாத்தினார்,

அப்போது கூடியிருந்த பெருந்திரளான பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோவிந்தா கோவிந்தா என எழுப்பிய கோஷம் வைகுண்ட வாசலை எட்டியது, இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீப ஆராதனைகள், மற்றும் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருநின்றவூர் என்னைப் பெற்ற தாயார் பக்தவச்சல பெருமாள் கோவில் திருவள்ளூர் வைத்திய வீரராகவர் சுவாமி கோவில்,

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் உள்ளிட்ட பல்வேறு வைணவ திருத்தலங்களில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.

வைர முடி சாற்றும் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News