2024.ஆம் ஆண்டின் முதல் தேய்பிறை அஷ்டமி

Update: 2024-01-03 09:49 GMT

தேய்பிறை அஷ்டமி

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு பிறகு வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதி இந்த ஆண்டின் முதல் தேய்பிறை அஷ்டமி ஜனவரி 4-ஆம் தேதி வருகிறது. தேய்பிறை அஷ்டமி நாளில் காலத்துக்கு அதிபதியான சிவபெருமானின் உக்கிர வடிவமான காலபைரவரை வழிபடுவது வழக்கம் தேய்பிறை அஷ்டமி அன்று விரதம் அனுஷ்டித்து விளக்கேற்றி பைரவரை வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் பயம். கண் திருஷ்டி.துன்பம் .வறுமை. தடைகள் பிரச்சனைகள் விலகும். தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை வழிபட்டால் சனி தோஷம் குறையும். அஷ்டமி அன்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் 5.7.,9.,11.விளக்கேற்றி வேண்டுதல்களை முன் வைத்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி திதி 3.1.2024 அன்று இரவு 7. 48 மணிக்கு தொடங்கி ஜனவரி 4 .2024 இரவு 10:04 மணிக்கு முடிவடையும்.

Tags:    

Similar News