9 நவக்கிரக கோயில்களுக்கும் இன்று முதல் குளிா்சாதன பேருந்து இயக்கம்

9 நவக்கிரக கோயில்களுக்கும் இன்று முதல் குளிா்சாதன பேருந்து இயக்கப்படுகிறது.

Update: 2024-03-25 13:47 GMT

கோப்பு படம் 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் கும்பகோணத்திலிருந்து 9 நவக்கிரகக் கோயில்களுக்கும் குளிா்சாதன வசதியுடன் சிறப்பு சுற்றுலா பேருந்து திங்கள்கிழமை (மாா்ச் 25) முதல் வாரத்தில் 7 நாள்களும் இயக்கப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் கே.எஸ். மகேந்திரகுமாா் தெரிவித்திருப்பது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் நவக்கிரக சிறப்பு சுற்றுலாப் பேருந்து பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இப்பேருந்துக்கு பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றதையடுத்து வயதானவா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க குளிா்சாதன வசதியுடன் மேலும் கூடுதலாக ஒரு சிறப்பு சுற்றுலா பேருந்து திங்கள்கிழமை முதல் நாள்தோறும் இயக்கப்படுகிறது.

இப்பேருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு, 9 நவக்கிரக கோயில்களுக்கும் சென்று தரிசனம் முடித்து இரவு 8 மணியளவில் கும்பகோணம் பேருந்து நிலையம் திரும்ப வந்து சேரும் வகையில் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும்.

இப்பேருந்தில் நபா் ஒருவருக்கு ரூ. 1,350 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குளிா்சாதன வசதியுடன் கூடிய நவகிரக சிறப்பு சுற்றுலா பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் உள்ள பயணிகள் இணையதள முகவரியில் முன்பதிவு செய்து, தங்களது பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

கைப்பேசி செயலி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம். நேரடியாகப் பேருந்தில் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ள இயலாது.

Tags:    

Similar News