அழகர் கோவில் உண்டியல் எண்ணிக்கை 56 லட்சம்
மதுரை அழகர் கோவில் நடைபெற்ற உண்டியலில் ரூ.56 லட்சம் இருந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-28 13:04 GMT
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்கள்
அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் 28.06.2024, வெள்ளிகிழமை, இன்று உண்டியல் திறப்பு நடைபெற்றது. இதில் திருக்கோவிலின் துணை ஆணையர் /செயல் அலுவலர் கலைவாணன் , மதுரை உதவி ஆணையர் வளர்மதி, அலங்காநல்லூர் சரக ஆய்வர் சாவித்திரி, திருக்கோவிலின் அறங்காவலர் பாண்டியராஜன்,
அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், பிரதீபா, PRO முருகன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 56,51,119/- ம் தங்கம் 92 கிராம் மற்றும் வெள்ளி 260 கிராம் ஆகியன கிடைக்கப் பெற்றன.