சோழீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம்
சங்ககிரி அருகேயுள்ள அரசிராமணி சோழீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம்;
By : King 24x7 Website
Update: 2023-12-27 17:41 GMT
சங்ககிரி அருகேயுள்ள அரசிராமணி சோழீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம்
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சோழீஸ்வரர் உடனமர் பெரியநாயகி கோவிலில் ஆரூத்ரா தரிசனம் நடைபெற்றது. ஆரூத்ரா தரிசனத்தையொட்டி அருள்மிகு பெரியநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோவிலில் அருள்மிகு நடராஜர் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு. அலங்கார பூஜைகள் நடைபெற்றது . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.