ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வழிப்பாடுகள் !!

Update: 2024-10-11 11:09 GMT

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்துக்கள் கொண்டாடும் விழாக்களில் ஒன்றாக நவராத்திரி விழா இருக்கிறது. 9 நாட்கள் நவராத்திரி விழாவில் துர்க்கை அம்மனை முதல் மூன்று நாட்கள் வழிபட வேண்டும். அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும். அதற்கடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரி விழாவின் இறுதியில் சரஸ்வதி தேவியை பூஜை செய்து வழிபடுவதால் அந்த நாள் சரஸ்வதி பூஜை என்று நாம் சொல்கிறோம்.

நினைத்தது நடக்க வேண்டுமானால் சரஸ்வதி தேவியை வணங்கலாம். மேலும் கல்வியில் சிறந்து விளங்கும் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதால் கல்வி ,ஞானம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஒரு மனிதனின் வாழ்வில் கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே போல அவர் செய்யும் தொழிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பது பழமொழி. எனவே நாம் செய்யும் தொழிலையும், அதற்கான கருவிகளையும் இறைவனின் முன்பாக வைத்து வழிபடும் முறையும், இந்த நாளில் பின்பற்றப்படுகிறது. எனவே இந்த தினம் ‘ஆயுத பூஜை’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

ஆயுத பூஜை நாளில் மதியம் 12 க்கு மேல் 1.30 க்குள்ளும் பூஜை செய்து இறைவனை வழிபடலாம். மாலையில் 4.45 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும்.

Tags:    

Similar News