ஐயப்ப பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ஐயப்ப பக்தர்கள் சிறப்பு வழிபாடு;
By : King 24x7 Website
Update: 2023-12-31 13:03 GMT
ஐயப்ப பக்தர்கள் சிறப்பு வழிபாடு
பொன்னமராவதி அழகப்பெருமாள் கோவிலில் பட்ட மரத்தான் ஐயப்பன் பக்தர்கள் சார்பில் பஜனை நடந்தது பொன்னமராவதிப் பகுதிக்குட்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஒன்று கூடி குருசாமி ரமேஷ் தலைமையில் இருமுடி கட்டி பஜனை பாடல்கள் பாடி சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடா்ந்து அன்னதானம் நடந்தது. இதில் 200 க்கு அதிகமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். ஐயப்ப பக்தர்களால் ஒன்பதாம் ஆண்டு ஊர்வலம் நடந்தது. இதயொட்டி சுந்தர்ராஜ பெருமாள் கோயிலில் இருந்து முக்கிய வீதியின் வழியாக மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் ஐயப்ப சுவாமி வீதி உலா வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர் ஏற்பாடுகளை குருசாமி ராஜா கோவிந்தன் தலைமையில் ஆன தர்ம சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.