ஆடிமாதம் திருமணம் நடத்தலாமா?

Update: 2024-08-17 12:30 GMT

 ஆடிமாதம் திருமணம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பொதுவாக ஆடிமாதம் திருமணம் நடத்துவதில்லை. எந்த சூழ்நிலையிலும் ஆடி மாதம் திருமணம் செய்வது முன்னோர்கள் ஆமோதிப்பதில்லை.

தமிழ் மாதங்களில் நான்காவது மாதமான ஆடிமாதத்தை ராசியில்லாத மாதமாகவே கருதி வந்தனர். இதிலிருந்து ஏதோ ஒரு விஷயம் இதன் பின்னால் உள்ளதை உணரலாம்.

ஆடி மாதத்துக்குப் பின் வரும் ஆவணி மாதம் நிலவின் குளிமை நிறைந்த மாதம் என்றும் அதனால் ஆவணியிலே திருமணம் செய்யலாம் என்று சொல்வது வழக்கம். திருமணம் என்ன, எந்த முக்கிய சடங்குகளும் ஆடிமாதம் நிகழ்வதைத் தவிர்த்து வருகின்றோம்.

ஆடிமாதக் கஞ்சி என்ற நம்பிக்கையும் சில மக்கள் ஆசாரித்து வருகின்றனர். சில மருந்து மூலிகைகள் கலந்த கஞ்சி குடிப்பதே ஆசாரம். இதை அந்த மருந்துக்கள் பெயர் சொல்லிக் குறிப்பிடாமல் மாதத்தின் பெயரிலேயே குறிப்பிடுகின்றனர்.

திருமணம் என்பது மனதாலும், உடலாலும் மிகவும் அல்லல்கள் எதிர்க் கொள்ள வேண்டிய வைபவம். அதனால் இதற்கு மிகவும் கவனம் தேவை. ஆடிமாதம் பொதுவாக உடல் நலத்துக்கு உகந்த மாதம் அல்ல. இயற்கை உடல் நலத்துக்குப் பிரதி கூலமானதாக இருக்கும். அதனால் உடல் நலத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய மாதம் இது. இந்த காரணத்தாலேயே ஆடிமாதம் திருமணம் போன்ற சடங்குகள் நிகழ்வதில் தடைவிதிக்கப்பட்டு வந்தது.

Tags:    

Similar News