கோயம்புத்தூர் கோவில்கள் !
மருதமலை
கோயம்புத்தூருக்கு வடமேற்கே ஏறத்தாழ சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் மருதமலை இருக்கிறது. இங்குள்ள முருகன் கோயில் ஏழாம் படை வீடாக கருதப்படுகிறது.இககோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. மேலும் இந்த மலை மருதம்மாள் வரை மருதவரை மருதவேற்பு மருதாச்சலம் வேள்வரை மருதக் குன்று என்றும் அழைக்கப்படுகிறது. மூன்று புறங்களிலும் உள்ள மலைகள் அரன்களாய் விளங்குகின்றன .கோவிலுக்கு பின்புறம் உள்ள மலைகளின் இயற்கை அமைப்போடு சேர்ந்து பார்க்கும் போது மயில் தோகை விரித்தார் போல் காட்சி அளிக்கிறது. இங்கு கோவில் கொண்டிருக்கும் விநாயகர் முருகப்பெருமாள் சுயம்பு வடிவம் உடையவர்கள் இங்கு 18 சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர் வாழ்ந்தார் .இவர் தனது ஞானப் பாடல்களில் பாம்புகளைப் பற்றி பாடியதாலும் இவர் தன் முன் வாழ்வில் பாம்பாட்டியதாக வாழ்ந்ததாலும் பாம்பாட்டி சித்தர் என்று அழைக்கப்படுகிறார்
வெள்ளியங்கிரி மலை
தென் கைலாயம் என அழைக்கப்படும் இந்த வெள்ளியங்கிரி மலை கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியில் அமைந்திருக்கிறது இம்மலை தொடர் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரம் உடையது இம்மலை ஏழு சிகரங்களை கொண்டுள்ளது வெள்ளி விநாயகர் மலை ,பாம்பாட்டி மலை ,கைத்தட்டி மலை ஒட்ட ர் சமாதி மலை, பீமன் களி உருண்டை மலை ,ஆண்டிசுனைமலை ஆகிய ஆறு மலைகளைத் தாண்டி ஏழாவது மலையான கிரி மலையின் உச்சியில் குகை கோவிலில் சுயம்புவாக வெள்ளியங்கிரி ஆண்டவர் எழுந்தருளி இருக்கிறார்.
பேரூர்
சோழ கேரள மண்டலத்தின் ஒரு பகுதியான பேரூர் சோழ நாட்டின் தலைநகராக விளங்கியது இங்குள்ள பட்டீஸ்வரன் கோவிலிலும் கரிகாலன் சோழன் காலத்தில் கட்டப்பட்ட கிராம தேவதை கோவிலிலும் நால்வர் ஆலயமும் இந்த ஊரில் பெயர் பெற்றவை பட்டீஸ்வரன் கோயில் பேரூர் கோயில் என்றும் பேரூர் முருகன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது . இக் கோயிலின் சிறப்பம்சம் என்னவென்றால் இக் கோயிலின் கர்ப்ப கிரகத்தை சோழ அரசர் ஒருவரும் அர்த்தமண்டபத்தை கொங்கு சோழ அரசர் ஒருவரும் தெப்பக்குளத்தை மைசூர் அரசர் வருவதும் கனக சபையை மதுரை அரசர்கள் நிறுவியதாகவும் கூறப்படுகிறது.
பொள்ளாச்சி
கோயம்புத்தூர் மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள இவ்வூர் அம்மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும் பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளதால் இங்கு வருடம் தோறும் வானிலை ரம்மியமாக இருப்பதுடன் மனம் விட்டு ரசிக்க தக்க இயற்கை அழகுடனும் திகழ்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகரம் சினிமா துறையினர் மிகவும் விரும்பும் ஒரு இடமாக உள்ளது. பொள்ளாச்சி ஐயப்பன் கோயில் சபரிமலை ஐயப்பன் கோவிலுடன் நிறைய ஒற்றுமைகள் கொண்டதாக காணப்படுகிறது இக்கோயிலில் மூலவராக ஐயப்பன் இருந்தாலும் பிற தெய்வங்களின் சன்னதிகளையும் காணலாம். ஏராளமான பக்தர்கள் இங்கு தினந்தோறும் நடைபெறும் வழக்கமான சடங்கு முறைகள் ஹோமங்கள் மற்றும் பூஜைகள் ஆகியவற்றில் கலந்து கொள்ளும் பொருட்டு இங்கு வந்த வண்ணம் உள்ளனர் . மாசாணி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்
கோயிலில் மூலக்கடவுளின் திருவுருவம் பாம்பின் உடலை கொண்டுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து சுமார் 24 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் வழிபடுவோரின் பிரார்த்தனைகள் சுமார் மூன்று வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று நம்பப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.