பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு
பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு;
By : King 24x7 Website
Update: 2023-12-28 10:32 GMT
பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைகள் பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபட்டனர். சிறுமலை அகஸ்தியர் புறத்தில் அமைந்துள்ள சிவசக்தி ஆலயத்தில் மார்கழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மார்கழி மாதம் அதிகாலை 4 மணிக்கு விளக்கு பூஜைகள் தொடர்ந்து நடக்கும். பெண் பக்தர்கள் பஜனைப் பாடல்களை பாடி பூஜை செய்து இறைவனை வழிபடுவார்கள். இந்நிலையில் மாலையில் ஆண் பக்தர்கள் பூஜை செய்து பஜனை பாதங்களை பாடி வழிபடுவார்கள். கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்தனர். 21 நாட்கள் விரதம் முடிந்ததை அடுத்து, பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர்.ஒரு பக்தர் குழந்தையை வைத்துக் கொண்டு பூக்குழி இறங்கினார். அப்போது ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷம் விற்பனை முழங்கியது.